வெளிமாநிலங்களில் வசூல் வேட்டையாடிய 10 தமிழ் படங்கள்.. காணாமல் போன அஜித்!

தமிழில் உருவான சில படங்கள் வெளிமாநிலங்களிலும் வெளியானது. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கும் அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களிலும் தமிழ் படங்கள் அதிக வசூலைப் பெற்றுள்ளது. அவ்வாறு 2022 ஆம் ஆண்டு தமிழ் படங்கள் வெளிமாநிலங்களில் அதிக வசூல் செய்த படங்களைப் பார்க்கலாம்.

2.o : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 2.o. எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் கடந்த 2018இல் வெளியானது. இப்படம் தமிழ்நாட்டிலும் வசூல் சாதனை படைத்த நிலையில் இந்த ஆண்டு வெளி மாநிலங்களில் வெளியாகி வசூலில் நல்ல லாபம் பெற்றது.

கபாலி : பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ்நாட்டைப் போலவே வெளி மாநிலங்களிலும் இப்படம் வசூலில் வேட்டை ஆடியது.

எந்திரன் : ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் எந்திரன். இப்படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் எந்திரன். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். ரஜினியின் எந்திரன் படமும் வெளிமாநிலங்களில் நல்ல வசூலைப் பெற்றது.

பிகில் : அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். ஃபுட்பாலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய்க்கு தமிழ்நாடு போலவே மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் பிகில் படமும் வசூல் சாதனை படைத்தது.

தர்பார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் மிரட்டலான நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தில் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினியின் படங்கள் தொடர்ந்து வெளிமாநிலங்களில் வசூல் சாதனை படைத்த நிலையில் தர்பார் படமும் வசூலில் வேட்டையாடியது.

மெர்சல் : அட்லி இயக்கத்தில் ரஜினி, காஜல் அகர்வால், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் வெளி மாநிலங்களிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

பேட்ட : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2019 வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மேலும் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல லாபம் பெற்று இருந்தது. அதேபோல் வெளிமாநிலங்களில் வெளியாகி வசூலை வாரி குவித்துள்ளது.

சர்கார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அரசியலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது. இப்படம் வெளி மாநிலங்களிலும் நல்ல வசூலைப் பெற்றது.

ஐ : ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ. இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளி மாநிலங்களிலும் வெளியாகி வசூலை பெற்றது.

பீஸ்ட் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அதேபோல் படம் வெளி மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

- Advertisement -