IMDB வெளியிட்ட 2022 சிறந்த டாப் 10 படங்கள்.. இந்தியளவில் டஃப் கொடுத்த காந்தாரா

உலகம் முழுவதும் திரைப்பட விமர்சன ரேட்டிங்கிற்காக சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இணையதள பக்கமான IMDB, இந்த ஆண்டில் வெளியான படங்களில் டாப் 10 இடத்தைப் பிடித்த சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் டஃப் கொடுத்திருக்கிறது காந்தாரா.

இதில் 2022 ஆம் ஆண்டு கே கிரண்ராஜ் இயக்கத்தில் வெளியான 777 சார்லி என்ற கன்னட படம் இந்த வருடம் வெளியான சிறந்த படங்களின் டாப் 10 லிஸ்டில் 10-வது இடத்தையும், மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 9-வது இடத்தையும், சீதாராமன் என்கின்ற ரொமான்டிக் காதல் கதைக்களத்தை கொண்ட தெலுங்கு திரைப்படம் 8-வது இடத்தையும், மேஜர் என்ற பயோகிராபிகள் ஆக்சன் திரைப்படம் 7-வது இடத்தையும் பெற்று இருக்கிறது.

ராக்கெட்ரி: மாதவன் இயக்கி, நடித்து வெளியான படம் ராக்கெட்டரி. இப்படத்தில் சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சூர்யா கேமியோ தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். இப்படம் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் இந்த வருடம் வெளியான டாப் 10 சிறந்த படங்களில் லிஸ்டில் 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.

காந்தாரா: கன்னட மொழியில் வெளியாகி காந்தாரா திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து நிலைத்து நிற்கிறது. நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். காந்தாரா திரைப்படம் கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு அடுத்து உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது கன்னட படம் ஆகும். 16 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது. அதிலும் 2002 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில் லிஸ்டில் விக்ரம் 5-ம் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பில் மண்ணைக் கவ்விய 6 படங்கள்.. தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளர்கள்

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பியது. தனக்கே உரிய பாணியில் அசத்தி இருந்த கமல் இந்த படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸையே தெறிக்க விட்டார். அந்த வகையில் உலக நாயகன் சர்வதேச அளவில் ஒரு சாதனையாளராக மாறியது குறிப்பிடத்தக்கது. அதிலும் 2002 ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில் லிஸ்டில் விக்ரம் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

கேஜிஎஃப் 2: இந்த படத்தின் முதல் பாகமே, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தங்க சுரங்கத்திற்காக பொதுமக்களை அடிமைபடுத்தியவர்களை யாஷ் அழிப்பதாக முதல் பாகத்தில் இருந்தது, இரண்டாம் பாகத்தில் அந்த தங்க சுரங்கத்திற்கு அவரே முதலாளியாக இருந்து மாஸ் காட்டினார். இந்தப்படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 1200 கோடியை குவித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் இந்த வருடம் வெளியான 10 சிறந்த படங்களின் லிஸ்டில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

Also Read: 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்கள்.. ஆல் ரவுண்டராக கலக்கிய பிரதீப்

தி காஷ்மீர் பைல்ஸ்: விவேக் அக்னி கோத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் த காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரில் நடந்த சில சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் பற்றியும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் காஷ்மீரை பற்றி தெரியாத பல விஷயங்கள் இப்படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் சிறந்த படங்களின் பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

ஆர்ஆர்ஆர்: ராஜ மவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் வசூலிலும் சோடை போகவில்லை. தேசப்பற்று மிக்க இந்த படம் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களின் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

Also Read: 2022-ல் அதிகமா பேசப்பட்டு கொடிகட்டிப் பறந்த 6 இயக்குனர்கள்.. மணிரத்தினத்துக்கே சவால் விட்ட இளம் இயக்குனர்

இவ்வாறு இந்த 10 படங்கள் தான் ரசிகர்கள் மனதைக் கவர்ந்ததுடன் வசூலிலும் தாறுமாறாக வெற்றியை குவித்து இந்த வருடம் வெளியான சிறந்த 10 படங்கள் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது. அதிலும் குறைந்த பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த காந்தாரா மற்ற படங்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்