சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கக்கூடிய சீரியல்களை அந்த வாரத்தின் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் சன் டிவியின் சுந்தரி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஏனென்றால் கடந்த வாரம் இந்த சீரியலில் அதிரடி திருப்பங்களை அரங்கேற்றி கணவனே கண்கண்ட தெய்வம் என நம்பியிருந்த சுந்தரியை ஆக்ரோசமாக கண்டித்தனர். அதுமட்டுமின்றி சீரியலில் சுந்தரி கணவனுக்கு எதிராக போட்ட சவால் சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து டிஆர்பி-யில் டாப் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி-யில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த கயல் சீரியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்ட சில மாதங்களே ஆனாலும் ரசிகர்களின் மத்தியில் கயல் சீரியலில் கதாநாயகன் கதாநாயகி இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி இந்த சீரியலின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடம் சன் டிவியின் ரோஜா சீரியலுக்கு கிடைத்துள்ளது. மேலும் நான்காம் இடம் சன்டிவியின் வானத்தைப்போல என்ற சீரியலுக்கும், ஐந்தாவது இடம் சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஐந்து இடங்களையும் சன் டிவியில் சீரியல்களை பெற்றிருப்பது இந்த வாரத்தில் சன் டிவிக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதே அர்த்தம்.
இதைத்தொடர்ந்து 6-வது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலும், 7-வது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 8-வது இடத்தை பாரதிகண்ணம்மா சீரியலும் வரிசையாக தட்டிச் சென்றுள்ளது. பொதுவாக பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த மூன்று சீரியல்களும் டாப் 10 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விடும்.
ஆனால் இந்த வாரம் அதற்கு மாறாக டாப் 10 வரிசையில் இருந்த பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது விஜய்டிவி ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து 9-வது இடம் மீண்டும் சன்டிவியின் அபியும் நானும் சீரியலுக்கும், 10-வது இடம் விஜய் டிவி ராஜா ராணி2 சீரியலுக்கும் கிடைத்துள்ளது.