India | இந்தியா
ஒரு டீ விலை 13,800 ரூபாய்க்கு விற்கிறார்களாம்.. அப்படி என்ன அந்த டீ-யின் ஸ்பெஷல் தெரியுமா?
வெளிநாடுகளில் புது விதமாக நடக்கும் பல விஷயங்களைப் பார்த்து இன்னமும் நாம் வாயைப் பிளந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்தவகையில் லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு டீ-யின் விலை ரூ 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறதை பார்த்து அதிர்ச்சியில் உள்ளோம்.
அப்படி என்ன ஸ்பெஷல்?
லண்டன் தலைநகரில் உள்ள பர்மிங்காம் பேலஸ் பக்கத்தில் உள்ள ரூபன்ஸ் எனும் நட்சத்திர ஹோட்டலில் தான் அந்த டீ ஒரு விலையுயர்ந்த வெள்ளை நிற குடுவையில் கொடுக்கப்படுகிறதாம். அந்த வெள்ளை குடுவையின் விலை சுமார் 48 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த ஸ்பெஷல் தேயிலையை கொண்டு டீ தயாரித்து அந்த குடுவையில் ஊற்றி குடிக்கும் போது தங்களையே மறந்து விடும் போன்ற உணர்வு ஏற்படுகிறது என்கிறார்கள் ஹோட்டல் வாசிகள்.
பலரும் அந்த ஊருக்கு அந்த டீ குடிப்பதற்காகவே வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த டீ-யின் சுவையை சுவைத்துவிட்டால் எப்போது மீண்டும் அதை சுவைக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருக்கிறதாம்.
அந்த தேயிலை எங்கு உற்பத்தியாகிறது?
நமது அண்டை நாடான இலங்கையில் தான் அந்த தேயிலை உற்பத்தி ஆகிறது. இந்த தேயிலையை அந்த லண்டன் ஹோட்டல் உரிமையாளர் பிரத்யேகமாக விலை கொடுத்து வாங்கி வருகிறாராம்.
