Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் மகனை இனி யார் காப்பாற்றுவார்கள்? கவலையில் ஜூனியர் என்.டி.ஆர்

என் மகனை காப்பாற்ற முடியவில்லை என ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் போட்டு இருக்கும் ஒரு ட்வீட் வைரலாக பரவி வருகிறது.
நந்தமூரி தராகா இராம ராவ் என்று சொன்னால் கூட பலருக்கு தெரியாது. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் என்றால் ரசிகர்கள் எளிதாக அடையாளம் கண்டு விடுவர். முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். டி. இராம இராவுடைய பேரனும், தெலுங்கு உலகின் சூப்பர்ஸ்டாராகவும் இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நின்னு சூடாலனி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
பல படங்களில் நடித்து இன்று தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நாயகனாக இருக்கிறார். பல நிறுவனங்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் தான் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். சமீபத்தில் வைரல் ஹிட் அடித்த பிக்பாஸ் தெலுங்கு முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தான் தொகுத்து வழங்கினார். கமலிடம் பார்த்த அமைதியெல்லாம் அங்கு இல்லை. எதிலுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசுவதே இவரின் ஸ்டைலாக அமைந்தது. தொடர்ந்து, பல படங்களில் நடித்து வருவதால் பிக்பாஸ் சீசன் 2விற்கு நோ சொல்லி இருக்கிறார்.
ஜூனியர் 2011ம் ஆண்டு நர்னி லட்சுமி பிரனதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு அபய் ராம் என்ற மகன் இருக்கிறார். பெரும்பாலும், சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட கஷ்டப்படுவர். அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும் என்பதே உண்மை. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் தன் குடும்பத்திற்கு சமமான நேரத்தை செலவிட்டு வருகிறார் என்பதை அவரின் சமீபத்திய ட்வீட் நிரூபித்து இருக்கிறது.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன் மகன் அபய் பால் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தினமும் ஒரு கப் பால் குடிக்க வேண்டும் என்ற கண்டிப்பான அம்மாவிடம் இருந்து என் மகனை காப்பாற்ற முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
