தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய போராட்டம் நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட தினம் ஒரு நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தமிழகத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி வேலை நிறுத்தம்!

இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் களத்திற்கு வந்தனர். நேற்றோடு 38 நாள் முடிந்த நிலையில் , நாளை சிறுநீர் குடிக்கும் போராட்டமும், நாளை மறுநாள் மலம் குடிக்கும் போராட்டமும் நடத்த திட்டமிட்டிருப்பதாக அய்யாக்கணணு தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விரைவில்..24 மணி நேரமும் இயங்கக்கூடிய திரையரங்குகள். மத்திய அரசு பரிசீலனை

அதற்காக இன்றே போராட்ட களத்தில் பாட்டில்களில் சிறுநீரை பிடித்து பார்வைக்கு வைத்துள்ளனர். போலீசார் அப்புறப்படுத்த முயன்றால் போராட்டம் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.