தமிழ் திரையுலகில் வெள்ளிக் கிழமை சென்டிமென்ட் எப்போதும் உண்டுங்க. அப்படி நாளை வெள்ளியன்று வெளியாகவிருக்கும் படங்களை பற்றி கொஞ்சம் பாப்போம் வாங்க.

நான் ஆணையிட்டால்:

பாகுபலி புகழ் ராணா ஹீரோவாக நடித்து தெலுங்கில் வெற்றிகண்ட நேனே ராஜூ நேனே மந்திரியின் தமிழ் பதிப்பான நான் ஆணையிட்டால் நாளை வருகிறது. காஜல் அகர்வால் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்டது.

ஆயிரத்தில் இருவர்:

நீண்ட இடைவேளைக்கு பிறகு சரண் இயக்கத்தில் வெளிவரும் படம் இது. இப்படத்தில் வினை, சமுத்ரிகா, ஸ்வஸ்திகா போன்றோர் நடிக்கின்றனர். வினை முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

பயமா இருக்கு:

இதுவரை யாரும் பார்த்திடாத பேய் படமாம் பயமா இருக்கு (அய்யய்யோ பேயை நிம்மதியா கொஞ்ச நாள் கூட விடமாட்டாங்க போலருக்கே). ரேஷ்மி மேனன், சந்தோஷ் பிரதாப், கோவை சரளா நடித்துள்ளனர்.

மேலும் களவுத் தொழிற்சாலை, திட்டி வாசல், சென்னையில் ஒரு நாள் 2, பிச்சுவாக்கத்தி, கா கா கா, தெருநாய்கள், வல்லதேசம் போன்ற படங்களும் வெளிவருகின்றன.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நான் ஆணையிட்டால் மட்டும்தான் உருப்புடியா இருக்கும்னு தோணுது.