vijaysethupathy

விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இவர் இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார்.

vijaysethupathy

2010ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தெறிக்கும் ஆக்ஷ்னில் இணையதளத்தை கதரவிடும் செக்க சிவந்த வானம் ட்ரைலர்.!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸர், நாளை மாலை ரிலீஸாகிறது.

vijay sethupathi

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளார்.

நிகாரிகா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  Sethupathi Movie Stills
Vijay-sethupathi

இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்ல, மொத்தம் 8 கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி.

ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது.