Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னையில் நாளை மின் துண்டிப்பு செய்யப்படும் பகுதிகள்.!
தமிழக மின்துறையின் முக்கிய அறிவிப்பு
தமிழக மின்துறை ஓர் முக்கிய அறிவிப்பினை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. அதன்படி, “நாளை (செப்டம்பர் 4ம் தேதி) சென்னையில் உள்ள சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்படும். சில பராமரிப்பு பணிகள் செய்யவுள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விநியோகிக்கப்படும். பணி 4 மணிக்கு முன்னதாகவே முடிவடையும் பட்சத்தில் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் துண்டிப்பு ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ
கிண்டி – இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பை நகர், ஏ, பி,சி,டி பிளாக், சவுத் பேஸ், அண்ணா சாலை, ஜெ.என்.சாலை, தனக்கோட்டி ராஜா தெரு, கணபதி காலனி, டி.எஸ்.&மினி, லேபர் காலனி, நார்த் பேஸ், பூந்தமல்லி சாலை, அச்சுதன் நகர், பாலாஜி நகர், நாகிரெட்டி தோட்டம்.
அடையார் – கேன்சர் மருத்துவமனை
செங்குன்றம் – ஜி.என்.டி. ரோடு, நறவரிக்குப்பம், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், விளங்கடுப்பாக்கம், கொசப்பூர், சென்ட்ரம்பாக்கம், தீயம்பாக்கம், சிருங்காவூர், தீர்த்தகரையான் பட்டு, பலவாயல். சிறுசேரி – கரணை, டி.எல்.எப். அபார்ட்மெண்ட்ஸ், டி.என்.எஸ்.சி.பி. (சுனாமி குவாட்டர்ஸ்)
