டாம் குரூஸ்ஸிடம் கைவரிசை காட்டிய பக்கா திருடன்.. வருத்தம் தெரிவித்த பி.எம்.டபிள்யூ நிறுவனம்

மிசன் இம்பாசிபில் படத்தின் வாயிலாக அனைத்து உலக நாடுகளுக்கும் அறியப்பட்ட நடிகர் டாம் க்ரூஸ். டூப் இல்லாத சண்டைக்காட்சிகளுக்கும் ஸ்டண்டுகளுக்கும் பெயர் போனவர். பல்வேறு படங்களின் டூப் இல்லாத நாயகர்களின் சண்டைக்காட்சிகளுக்காக அவர்களது ரசிகர்கள் டாம் க்ரூஸுடன் ஒப்பிடுவதை மறந்துவிட முடியாது.

மிசன் இம்பாசிபிள் அடுத்த பாகம் படப்பிடிப்பில் இருப்பதால் இப்படத்திற்காக பிரிட்டனில் தங்கியுள்ளார் டாம் க்ரூஸ். பிரிட்டனின் நகர் புரங்களில் சுற்றிக்கொண்டிருந்த டாம் க்ரூஸின் கார் திடீரென மாயமானது.மாயமான சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டது அதற்கு காரணம் அந்த காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி தானாம்.

காரை காப்பாற்ற முடிந்த போலிசாரால் காரில் உள்ள உடைமைகளை மீட்டெடுக்க முடியவில்லை. காரை மீட்டது தொடர்பாக போலிசார் கூறுகையில் காரின் ஓட்டுனர் ஏதோ பித்து பிடித்தது போல இருந்ததாகவும் மேற்கொண்டு விசாரனைக்கு எடுத்துச்சென்றுள்ளதாகவும் கூறினார்.

tom-cruise
tom-cruise

மேலும் பி.ம்.டபுள்யூ எக்ஸ்-7 காராகிய இந்த கார் சாவி இல்லாத டைப் என்றும் இதற்காக விசேசமாக நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே இதனை செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர். இந்த கார் களவிற்கு வருத்தம் தெரிவித்த பி.எம்.டபுள்யூ நிறுவனம் உடனே அதே மாதிரியான காரை டாம் க்ரூஸுக்கு தருவதாக கூறியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்