fbpx
Connect with us

Cinemapettai

அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது யார் தெரியுமா? தனுஷை மிஞ்சுவாரா நடிப்பில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவது யார் தெரியுமா? தனுஷை மிஞ்சுவாரா நடிப்பில்

பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் தான் அசுரன். கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் பிரம்மாண்ட அசுரனாகவே ரிலீஸாகி வெற்றி பெற்ற படம்.

இப்படத்தில் 50 வயது சிவசாமியாக மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்திருப்பார். பிளாஷ் பேக்கில் சாராயம் காச்சும் வாலிபர் ரோலிலும் வளம் வருவார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் வெங்கடேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகின்றது.

venkatesh

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் வி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இயக்குனர், நடிகர், நடிகையர், டெக்கனிகள் டீம் விவரங்களை முடிவு செய்து வருகின்றனர் படக்குழு.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ் – திரிஷா நடிப்பில் ஹிட் அடித்த படத்தை தான் “யாரடி நீ மோஹினி” என தனுஷ் – நயன்தாரா நடித்தனர். தற்பொழுது தனுஷின் அசுரன் படத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். வயதான கெட்- அப் ஓகே, ஆனால் வாலிப ரோலுக்கு வெங்கடேஷ் உடல் எடை குறைத்து ரெடி ஆவாரா, அல்லது வேறு யாரேனும் நடிப்பாரா என்பதே இங்கு மில்லியன் டாலர் கேள்வி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top