டோலிவுட்டின் நாயகனான அல்லு அர்ஜுன் தற்போது நானும் விஜய் ரசிகன் தான் என்று மனம் திறந்துள்ளார்.

அதாவது சமீபத்தில் கொச்சினில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூனிடம் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் விஜய் மற்றும் சல்மான் கான் என அல்லு அர்ஜூன் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஆர்யாவிற்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் டைட்டில்

அதிலும் விஜய்யின் ஆக்ஷன் படங்களான துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் தனக்கு மிகவும் பிடித்தவை என கூறியுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மாஸ் படங்களும் தனக்கு பிடிக்கும் என கூறிய அல்லு அர்ஜூன் முதலில் ஷாருக்கானின் படங்களை விரும்பி பார்த்து வந்த நான் தற்போது சல்மான் கானின் ஆக்ஷன் படங்களை அதிகம் விரும்புகின்றேன் என்றும் கூறியுள்ளார்.