மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை சுரபி லட்சுமி. இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியுள்ளார். சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றுள்ளார்.

திரிச்சூரில் பள்ளியக்கரா பகுதியை அடைந்த போது அருகே இருந்த சோதனை சாவடியில் இருந்த ஊழியர்கள் ஆமை வேகத்தில் வேலை செய்துள்ளனர்.

நீண்ட நேரமாக டோக்கன் பெறுவதற்கு தான் காத்திருந்தது மட்டுமில்லாமல், அருகில் வேறொரு காரில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்வதற்காக காத்திருந்த தம்பதிக்கும் சேர்த்து சுரபி, ஊழியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் அங்கு சலசலப்பாக மோதல் ஏற்பட பின் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.