Videos | வீடியோக்கள்
32 சர்வதேச விருதுகளை தட்டிச் தூக்கிச்சென்ற “டுலெட்” படத்தின் ட்ரைலர் இதோ.!
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் இயக்கிய டுலெட் என்ற படத்தின் மூலம் உலக அளவில் தமிழ் சினிமாவை தலை நிமிர செய்துவிட்டார், தேசிய விருதைப் பெற்ற டுலெட் திரைப்படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு திரையிடப்பட்டுள்ளது.
அப்படி திரையிடப்பட்டு 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது, அதேபோல் விருதுக்காக 80 முறை இந்த திரைப்படம் முன்மொழியப்பட்டது, இந்த நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குனர் எப்படி இது போல் கதையை உங்களால் உருவாக்க முடிந்தது எனக்கூறி செழியனை புகழ்ந்து தள்ளினார்.
ஒளிப்பதிவாளர் செழியன் கல்லூரி, தென்மேற்கு பருவகாற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இவர் இயக்கிய முதல் படம் தான் டுலெட் தனது முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை கடந்து இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை செய்த சாதனையை செய்துள்ளது.
இந்த படத்தின் கதை சென்னையில் 2007 முதல் சாப்ட்வேர் துறை வளர்ச்சி அடைந்ததால் வீடு வாடகைக்கு கிடைப்பது எப்படி ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த படத்தில் எதார்த்தமாக காட்டியுள்ளார்கள்.
