fbpx
Connect with us

Cinemapettai

இந்த நடிகையோடு சேர்ந்து திரையுலகில் கால் பதிப்பேன் – சரவணா ஸ்டார் உரிமையாளர்

9thara

News | செய்திகள்

இந்த நடிகையோடு சேர்ந்து திரையுலகில் கால் பதிப்பேன் – சரவணா ஸ்டார் உரிமையாளர்

நயன்தாராவுடன் ஹீரோவாக நடித்து சினிமாவில் கால்பதிப்பேன் என்று சரவணா ஸ்டோர் உரிமையாளர் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியின் முழு விவரங்களை கீழே பார்ப்போம்.சமீபகாலமாக சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் நடிப்பது அனைவரும் அறிந்ததே.

முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தோன்றி நடித்த விளம்பரங்கள் பலரிடத்திலும் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் ஆரம்ப விழா தொடங்கி, தீபாவளி, பொங்கல், கோடைக்கால விளம்பரம் வரை அனைத்து விளம்பரங்களிலும் இவரே விளம்பர மாடலாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை தற்போது துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளதாகவும், தான் கதாநாயகனாக நடித்தால் முதல் படமே நயன்தாராவுடன்தான் ஜோடி சேருவேன் என்று கூறியுள்ளார். சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்தார்.

முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, நான் திரையுலகில் முதல்படமாக நயன்தாராவுடன் நடித்து கால்பதிப்பேன் என்று கூறியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top