இன்று இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு போட்டி T20 இறுதி போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது இன்று 7 மணிக்கு இந்தியா வங்கதேசம் அணிக்கு இடையே ஆனா இறுதி போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது இரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

Indian_cricket

இலங்கைக்கு எதிராக முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் அனைத்திலும் வெற்றிபெற்று இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது அதேபோல் இந்தியாவுடன் இரண்டு போட்டியில் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டியில் வெற்றி பெற்று உர்ச்சாகத்தில் இருக்கிறார்கள் வங்கதேச அணிகள். இரண்டு போட்டியில் இந்தியாவிடம் தோற்றதால் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற வங்கதேச அணி தீவிரமாக இருக்கிறது.

இரண்டு போட்டிகளில் வங்கதேசத்தை தோற்கடித்தது போல் இந்த போட்டியிலும் தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றிவிடலாம் என தீவிரமாக இருக்கிறார்கள் இந்திய அணி. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்க இருப்பதால் யார் வெற்றி பெறுவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.