ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

சூப்பர் ஸ்டாரின் வேட்டை ஆரம்பிச்சுடுச்சு.. வேட்டையன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Vettaiyan Twitter Review: ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன் என்ற லெஜன்ட் நடிகர்கள் இணைந்திருக்கும் வேட்டையன் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. லைக்கா தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் என ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

vettaiyan-review
vettaiyan-review

தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை சோசியல் மீடியாவில் வெளியீட்டு வருகின்றனர். அதில் ஜெயிலர் படத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாரை அதிரடியாக பார்ப்பது வேற லெவல் என பாராட்டியுள்ளனர்.

vettaiyan-review
vettaiyan-review

அதேபோல் வேட்டையன் ஜெயிலரை விட பல மடங்கு ஃபயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதிலும் சூப்பர் ஸ்டாரின் அறிமுக காட்சி பகத் பாஸிலுடன் அவருடைய காம்போ ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் தரிசனம்

மேலும் அனிருத்தின் இசையில் பாடல்களும் ஆட்டம் போட வைத்துள்ளது. அதேபோல் முதல் பாதி ஜோராக இருந்த நிலையில் இரண்டாம் பாதி சிறு தள்ளாட்டத்துடன் இருக்கிறது.

vettaiyan-review
vettaiyan-review

அமிதாப் பச்சனின் காட்சிகள் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது. அது மட்டும் இன்றி எமோஷனல் காட்சிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் தலைவரின் இந்த தரிசனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

vettaiyan-review
vettaiyan-review

திரைக்கதையில் சிறு சிறு குறைகளை ஆடியன்ஸ் கூறினாலும் மொத்தத்தில் வேட்டையனின் வேட்டை தரம் தான். தற்போது திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் நிலையில் அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் சூப்பர் ஸ்டார் வசூலிலும் மாஸ்காட்டுவார் என தெரிகிறது.

vettaiyan-review
vettaiyan-review
- Advertisement -spot_img

Trending News