fbpx
Connect with us

Cinemapettai

விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று வெளி வருவதில் பெரும் சிக்கல்..! கொந்தளித்து Tweet போட்ட பார்த்திபன்

vishal-banner

News | செய்திகள்

விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று வெளி வருவதில் பெரும் சிக்கல்..! கொந்தளித்து Tweet போட்ட பார்த்திபன்

விஷால் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த திரைப்படம் அயோக்யா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தை 40 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளனர்.

அதனால் விஷால் தரப்பினர் இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என நம்பி வந்த நிலையில் இன்று திடீரென படத்தை வெளியிட தடைவிதித்தது தயாரிப்பாளர் சங்கம்.

அதற்கு காரணம் அயோக்கிய படத்தின் தயாரிப்பாளர் மது இதற்கு முன் பழைய படத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்காததால் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் படத்தை தற்போது வெளியிட தடை விதித்துள்ளனர்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு இப்படி என்றால் மற்ற நடிகர்களுக்கு என்னவாகும் என பேசி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் விஷாலின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இப்படத்தைக் காண திரையரங்கிற்கு வந்தனர்.

ஆனால் திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தால் தற்போது ரசிகர்கள் படத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரையரங்கிலிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால் இப்படம் இனிமேல் எந்த தேதியில் வெளியாகும் என தற்போதுவரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.

இதற்காக உழைத்த அணைத்து நடிகர்களுக்கும் விரைவில்  ஒரு முடிவு வர வேண்டும். அயோக்யா படத்திற்காக காத்து கொண்டு இருக்கும் விஷாலின் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top