fbpx
Connect with us

மிரட்டிகொண்டிருக்கும் தோனி! விரட்டிகொண்டிருக்கும் மழை..!

News / செய்திகள்

மிரட்டிகொண்டிருக்கும் தோனி! விரட்டிகொண்டிருக்கும் மழை..!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் இன்று நடக்கவுள்ளது.  இந்திய அணி வெற்றிநடையை தொடரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியில் இந்திய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி, கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது.

இந்திய அணியின் ‘பேட்டிங்’ வரிசை பலமாக இருந்த போதிலும், சென்னையில் நடந்த முதல் போட்டியில் முதலில் இறங்கிய வீரர்கள் ஏமாற்றினர். எனவே இன்று ரகானே, ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தர வேண்டும். ‘டக்–அவுட்டாகி’ ஏமாற்றிய கேப்டன் விராத் கோஹ்லி, மணிஷ் பாண்டே எழுச்சி காண வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ கேதர் ஜாதவ் நம்பிக்கை அளிக்கிறார். சர்வதேச அரங்கில் 100 அரைசதம் அடித்த தோனி, இந்த ஆண்டு 4வது முறையாக ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா, மீண்டும் சாதிக்கலாம். பின்வரிசையில் புவனேஷ்வர் குமார், பேட்டிங்கில் ஒத்துழைப்பு தருவது கூடுதலம் பலம்.

வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர், பும்ரா, நம்பிக்கை அளிக்கின்றனர். ‘மிடில்’ ஓவரில் ‘ஆல்–ரவுண்டர்’ பாண்ட்யா, விக்கெட் வேட்டை நடத்துகிறார். முதல் போட்டியில் ‘சுழல் ஜாலம்’ காட்டிய ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ், யுவேந்திர சகால் மீண்டும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம்.

கோல்கட்டாவில் இன்று வெப்பநிலை அதிகபட்சமாக 32, குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசாக இருக்கும். பகல் பொழுதில் மழை வர 80 சதவீத வாய்ப்பு உள்ளது. மதியம் மற்றும் இரவு நேரத்தில், இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 41சதவீதம் இருந்தாலும் போட்டிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top