வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிய போராட்டம் தொடர்ந்தது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் நாள்தோறும் நூதனமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள்.

TN-Farmers-Delhi-Protest35-வது நாளாக இன்று புல் மற்றும் வைக்கோலை தின்னும் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சிலர் முட்டிப்போட்டு மாடுகளைப் போல நிற்க, அவர்களது வாயில் புல்லும், வைக்கோலும் வைக்கப்பட்டது. பிற விவசாயிகள் அவர்களை கயிற்றால் கட்டி மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதைப் போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டது.