இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.mersal audio teaser 1

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சற்று முன்னர் தனது டுவிட்டரில், ‘மெர்சல்’ படத்தின் நீதானே மற்றும் மெர்சல் அரசன் ஆகிய இரண்டு பாடல்களின் லிரிக்ஸ் வீடியோ யூடியூபில் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் மெர்சல் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய இந்த இரண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட நிலையில் இந்த லிரிக்ஸ் வீடியோவையும் ரசிக்க விஜய் ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மிக விரைவில் படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்து டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.