Videos | வீடியோக்கள்
இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபரை மறைமுக தெரிவித்த கமல்.. தெறிக்கவிட்ட புரோமோ!
மக்களால் விரும்பி பார்க்கப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியானது பிக்பாஸ் சீசன்4, விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உலகநாயகன் கமலஹாசன் ஹவுஸ் மேட்களுடன் உரையாடுவது வழக்கம்.
தற்போது இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த புரோமோவில் கமல் குரூப்பிசம் பற்றி வெளுத்து வாங்க போவதாக தெரிகிறது.
அதில் கன்டஸ்டன்ட்களை சேர, சோழ, பாண்டியர்களாக பிரித்தால் பாண்டியனாக ரேகா மற்றும் சனம் செட்டி தான் இடம் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள்தான் மீன் கொடிய அப்படி தூக்கிப்பிடிக்கிறார்கள் என்றும்,
பாண்டியன் கொடியில் இரண்டு மீன் இவர்களும் இருவர். என்ன அர்த்தம் புரியுதா? என கேள்வியுடன் இந்த புரோமோவை முடிக்கிறார் கமல்.
எனவே ரசிகர்களும் ‘ஒருவேளை இந்த இருவருள் ஒருவர்தான் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபரோ?’ என்ற குழப்பத்தில் உள்ளனர்.
