fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் முகமூடி அணிந்திருக்கும் நபரை வெளிச்சம் போட்டு காமிச்ச கமல்.. தெறிக்கவிட்ட புரோமோ!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் முகமூடி அணிந்திருக்கும் நபரை வெளிச்சம் போட்டு காமிச்ச கமல்.. தெறிக்கவிட்ட புரோமோ!

பிக் பாஸ் சீசன்4 விஜய் டிவியில் தினம்தோறும் சிறப்பாக ஒளிபரப்பாகி மக்களின் பிடித்தமானபொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது.

எனவே உலகநாயகன் கமலஹாசன் வீட்டில் உள்ள பிக் பாஸ் போட்டியாளர்களிடம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உரையாடுவார்.

அப்படியிருக்க ஞாயிற்றுக் கிழமையான இன்றைய நிகழ்ச்சியின் மூலம் பிக் பாஸ் வீட்டில் யார் முகமூடியுடன் சுற்றித் திரிபவர்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் கமல்.

எனவே இன்றைய நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் யார் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்படி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்? என்று கமல் கேட்ட கேள்விக்கு, சக போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

அப்பொழுது பெரும்பாலானோர் ரியோ மற்றும் ஆரியே பிக்பாஸ் வீட்டில் போலி முகத்துடன் இருக்கின்றனர் என்று அவர்களுக்கு மாஸ்க்கை அணிவித்தார்கள்.

அதன்பின் கமலிடம் ரியோ எனக்கு இந்த மாஸ்க்கை கொடுத்தது நியாயமில்லை என்று காரசார விவாதத்தில் ஈடுபடும் புரோமோ வீடியோவானது தற்போது வெளியாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை எகுற வைத்துள்ளது.

Continue Reading
To Top