நேரடியாக மோதும் அஜித் – தனுஷ்
அஜித்க்கு ரசிகர்கள் என்றால் உலகம் எங்கும் மிரளவைக்கும் அளவில் பட்டாளம் போல் உள்ளனர்,தனுஷ்க்கு ரசிகர்கள் அஜித்தை போல் ஏறக்குறைய உள்ளனர் என்றும் சொல்லலாம்,இருப்பினும் இருவரும் மோதிக் கொண்டால் ஒருவர் மட்டுமே வெல்ல முடியும்.

அஜித் – தனுஷ் நேரடியாக மோத உள்ளனர்… தெலுங்கு பட உலகில், என்னங்க புரியலையா?
அஜித் மற்றும் தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கில் நேரடியாக மோதிக்கொள்ளப் போகின்றன என்பது தான் விஷயமே! அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படம், வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதும் 25-ம் தேதி ரிலீஸாகும் இப்படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது.

அதே நாளில், தனுஷ் நடித்த ‘விஐபி 2’ படமும் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த வாரமே ‘விஐபி 2’ உலகம் முழுவதும் வெளியானாலும், தெலுங்கில் கடந்த வாரம் 3 பெரிய படங்கள் ரிலீஸானதால் ‘விஐபி 2’ அங்கு ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அஜித்தும், தனுஷும் தெலுங்கில் நேரடியாக மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இதில் அஜித் வெல்வார அல்லது தனுஷ் வெல்வார என்று பொறுத்திருந்து பார்ப்போம்.