fbpx
Connect with us

Cinemapettai

மனைவியின் ஆசையை நிறைவேற்ற, தோனியை ஓரங்கட்ட திட்டம் தீட்டும் சஹா !

News | செய்திகள்

மனைவியின் ஆசையை நிறைவேற்ற, தோனியை ஓரங்கட்ட திட்டம் தீட்டும் சஹா !

தோனிக்கு மாற்றாக இந்திய கிரிக்கெட் விக்கெட் கீப்பராக உள்ள சஹா 2019ல் நடைப்பெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என அவரது மனைவி ரோமி சஹா ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி 3வித உலகக் கோப்பையையும் வெல்ல காரணமாக இருந்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோலி கேப்டனாக இருந்து வருகின்றார். இருப்பினும் இந்திய அணி விளையாடும் ஒருநாள், டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகின்றார்.

தோனிக்கு 36 வயதாகிவிட்டதால் 2019ல் நடைப்பெறும் உலகக் கோப்பை போட்டி வரை விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி பலர் எழுப்பு வருகின்றனர். அவர் விளையாடி மீண்டும் உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்ற கருத்து பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சஹா ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, அடுத்த உலகக் கோப்பை போட்டியின் இந்திய அணியில் நான் இடம் பெற வேண்டும் என எனது மனைவி ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் உலகக் கோப்பை விளையாடும் இந்திய அணியில் இடம்பெறுவதும் மிகவும் கடினம். தற்போது வரை தன் திறமையை சரியாக வெளிப்படுத்தி வருகிறேன். ஆனால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற மேலும் எனது முயற்சி அதிகப்படுத்த வேண்டும். அதோடு சிறப்பாக ரன் குவித்து காட்டவேண்டியது கட்டயம்.தற்போது உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான தோனி இந்திய அணியில் இடம்பெற்று வருகிறார். அவரின் இடத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top