தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்றுகூடி ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’ என்ற அமைப்பை உருவாக்க உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமன விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, நிர்வாகிகள் விண்ணப்பம் கொடுப்பவர்கள் 200 பேரிடம் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை கிட்டத்தட்ட 75 நபர்கள் 200 நபர்களிடம் கையொப்பம் பெற்று நிர்வாகியாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு 3 நாட்களில் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, இந்த கட்சிக்குப் போட்டியாக ‘இளைஞர்கள் கூட்டமைப்பு’ உருவாகியுள்ளது. ஆகவே, தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இந்த பிரஸ்மீட் இளைஞர்கள் கூட்டமைப்புக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.