சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்- 1 முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கான குரூப்- 1 முதன்மை தேர்வானது கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.

அதிகம் படித்தவை:  தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி அவர் பெற்றோர் தானா?

இந்நிலையில், அந்த தேர்வுக்கான முடிவுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளப் பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இதுவரை நீங்கள் பார்த்திடாத ராகுல்ப்ரீத் சிங் அசத்தலான புகைப்படங்கள்.!

மேலும், தகுதி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.