வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்,டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ” தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் -2ஏ பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் சாதி மற்றும் கல்விச் சான்றுகளுடன் வரும் 11, 12 ஆகிய தேதிகளில், கிண்டியில் உள்ள துணை இயக்குநர், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சிக்கு தங்கள் பெயரைப் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் ” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  கூட்டு சேர்ந்து வேட்டையாடும் வார்னர் – தவான்!