Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுத வயதுவரம்பு அதிகரிப்பு.!

சென்னையில் சட்டசபை கூட்டத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, “டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, 1-ஏ மற்றும் 1-பி ஆகிய தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பை 35-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி., பி.சி ஆகிய பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீடு இல்லாத பிற பிரிவினருக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்” முதலிய அறிவிப்புகளையும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top