சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் திடீரென நேருக்குநேர் மோதி விபத்தை ஏற்படுத்தின. இந்த மோதலில் கப்பல்கள் சேதமடைந்து, அதிலிருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடல் நீரில் கலந்த இந்த கச்சா எண்ணெயை அகற்ற அரசு மெத்தனத்தை கடைபிடித்தநிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் இணைந்து எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், இளைஞர்கள் மூலம் உருவாகிய  என்ற சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்கே காரணமாகக் கூறப்படுகிறது. இந்த ஹேஷ்டேக் டுவிட்டர் டிரண்டிங்கில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

இந்த எண்ணெய் கசிவு பிரச்சனை டுவிட்டர் டிரண்டிங்கில் முதலிடத்தில் வந்ததால் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இதைப்பற்றி டுவிட்டரில் பதிவிடுவோரின் எண்ணிக்கை குவிந்து வருகிறது.