அதிமுகவின் உட்கட்சிப் பூசலால், தமிழகத்தின் ஆட்சி மற்றும் அரசு திட்டங்கள் செயல் இழந்து காணப்படுகிறது. யார் முதல்வர் என்ற பதவி, அதிகாரப் போட்டியால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் அதை மறுத்துவிட்டார். சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சபாநாயகர் மேஜை மற்றும் மைக்குகள் உடைக்கப்பட்டன. தொடர்ந்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் அவைக்காவலர்களால் அவர்களை பேரவையிலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றினர். இதில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.

இந்த சட்டைக்கிழிப்பு சம்பவத்தால், தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் மற்றும் கடைகளை உடைத்து வன்முறையிலும் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

தற்போது பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழக மக்களின் எதிர்ப்புகள் ஏராளமாக சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. மேலும், ஜனாதிபதி ஆட்சி கொண்டுவந்து மறுதேர்தலுக்கு வித்திட வேண்டும் எனவும் கமெண்ட்டுகள் பரவிக்கொண்டே உள்ளன.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தமிழக மக்களின் மன ஓட்டத்தை அறிய ஒரு கருத்துகணிப்பை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பில் , மறுதேர்தல், ஜனாதிபதி ஆட்சி என்ற 2 முன்னெடுப்புகளை குறிப்பிட்டுள்ளது. தலைப்பில் ‘தமிழ்நாடு அரசு வாக்கெடுப்பு- 2017’ என்று குறிப்பிட்டுள்ளது.

கூகுளின் இந்த கருத்துக்கணிப்பில் இதுவரை 42 ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். அதில், மறுதேர்தலுக்கு 86 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது, அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfGbvjbJjHZgSo4g6PhkJP14lYXr_KygIOxfRrO5quzdSOzPQ/viewform