Sports | விளையாட்டு
விவேகம், மாஸ்டர் பாடலுக்கு ஸ்டெப் போட்டு கலக்கிய தமிழக வீரர்கள்! வேற லெவல் ஜாலி டோய்
தினேஷ் கார்த்திக் தமிழகம் மட்டுமன்றி இந்திய கிரிக்கெட்டிலும் பிரபலமான பெயர் தான். அந்த காலகட்டத்தில் தோனி என்ற ஜாம்பவான் இருந்தும் தனக்கென்ற கிரிக்கெட் கேரியரை உருவாக்கியவர். விக்கெட் கீப்பர் என்பதனை மறந்து வெறும் பேட்ஸ்மேனாக இவரை இந்தியா எவ்வளவோ போட்டியில் ஆட வைத்துள்ளது.
இளம் வீரர்கள், மற்றும் டீம்மை வழி நடத்துவதிலும் வல்லவர் தான் கார்த்திக். சமீபத்தில் இவரது தலைமையில் பல முன்னணி வீரர்கள் இன்றியும் முஷ்டாக் அலி டி20 தொடரை 2-வது முறையாக தமிழகம் வென்றது.
லீக் முதல் எந்த ஆட்டத்திலும் தமிழக அணி தோல்வி அடையாமல் வெற்றி வாகை சூடியுள்ளது தமிழ்நாடு. லீக் சுற்றில் இமாச்சலம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் அணிகளையும், காலிறுதியில் ஹரியானாவையும், அரையிறுதியில் பஞ்சாபையும், இறுதிப்போட்டியில் பரோடா டீம்மை தோற்கடித்தது தமிழக அணி.

TNCA
பத்ரிநாத்துக்கு காயம் ஏற்பட, பின்னர் தினேஷ் கார்த்திக் தலைமையில் கடந்த 2006-07ம் ஆண்டு முதல்முறையாக தமிழக அணி முஷ்டாக் அலி கோப்பையை வென்றது, அதன்பின் 13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தினேஷ் கார்த்திக் தலைமை வென்று சாதித்துள்ளது.
போட்டி முடிந்த பின்பு சந்தோஷமாக கொண்டாடினர் நம் வீரர்கள். அப்பொழுது அஜித் மற்றும் விஜய் பாடல்களுக்கு அட்டகாச ஸ்டேப் போட்டு காட்டினார்.
