10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.

அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

* அங்கித் சவுத்திரி ரூ. 10 லட்சத்தில் துவங்கி, பெங்களூரூ அணிக்கு ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
* ஆப்கானிஸ்தான் வீரர் முஹமது நபி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்கும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார்.

* இர்பான் பதான், மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர்! ஆகியொர் விலை போகவில்லை.

* சேலத்தை சேர்ந்த தங்கராசு டி. நடராஜன், ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.