fbpx
Connect with us

Cinemapettai

“தூத்துக்குடி படுகொலை பற்றி நரேந்திர மோடியிடம் சொல்லுங்க ப்ளீஸ்.” விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த தமிழர்கள்.

Sports | விளையாட்டு

“தூத்துக்குடி படுகொலை பற்றி நரேந்திர மோடியிடம் சொல்லுங்க ப்ளீஸ்.” விராட் கோலியிடம் வேண்டுகோள் வைத்த தமிழர்கள்.

ஸ்டெர்லைட் ஆலை

வேதாந்தா குழுமத்துக்கு எதிராக 100 நாட்களுக்கு மேலாக அமைதியாக நடைபெற்ற வந்த போராட்டம்.அமைதியாக இருந்த தூத்துக்குடி போராட்டத்தின் நூறுவது நாள் அதுவுமா எப்படி கலவர பூமி ஆனது என்பது புரியாத புதிராக உள்ளது.

மத்திய அரசு, மாநில அரசு, எதிர்க்கட்சி என அனைவரும் வேடிக்கையே பார்க்கின்றனர். எனினும் கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக செயல்படவில்லை.

நரேந்திர மோடி

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு அக்கறை காட்டுகிறார். அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி கலாச்சார உயிர் இழப்புக்கு வருத்தம் தெரிவிக்கிறார். எனினும் சொந்த நாட்டில் உள்ள தமிழகத்தை பற்றி மட்டும் அம்னீஷியா வந்தவர் போல ஆகி விடுகிறார்.

இந்நிலையில் பலரும் ட்விட்டர், அவரின் அலுவலகத்துக்கு மின் அஞ்சல் என து அனுப்பியும் பதில் இல்லை அவரிடம் இருந்து. ஆனால் விராட் கோலி விடுத்த பிட்னெஸ் சாலஞ்க்கு பதில் சொல்ல மட்டும் நேரம் உள்ளது அவருக்கு.

விராட் கோலியிடம் வேண்டுகோள்

இந்நிலையில் விராட் அவர்களை டாக் செய்து இந்த கருத்து அதிகமாக சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்யப்படுகிறது.

அன்புள்ள விராட் கோலி, நான் அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை சேர்ந்தவன், கண்ணீருடன் இதை எழுதுகிறேன். மே 22 வேதாந்தா மற்றும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராடிய 14 சகோதர , சகோதரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். கேபிள் , இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. டிஸ்ட்ரிக்ட் முழு அடைப்பில் உள்ளது. போலீஸ் வீடு புகுந்து அடிக்கின்றனர்.

ஊடங்கங்கள் மிரட்டலால் உண்மையை ஒளிபரப்பவில்லை. முதல்வர் போலீஸ் செய்தது நியாயப்படுத்துகிறார். கவர்னரும் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் எவ்வளுவு முறை கேட்டும் மோடி மௌனம் சாதிக்கிறார்.

இன்று காலை அவர் உங்கள் டீவீட்டுக்கு பதில் அளித்தார். பிஸியாக இருக்கும் அவர் பிட்னெஸ் சாலஞ்க்கு பதில் தரார் ஆனால் எம் மக்கள் உயிர் இழப்பதற்கு பதில் சொல்ல வில்லை.

எனவே நீங்கள் தூத்துக்குடி படுகொலை பற்றி மோடியிடம் ட்வீட் செய்யுங்கள் என்று தாழ்மையாக கேட்கிறோம். அப்பயாவது அவர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் இதை செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக நாங்கள் RSS இன் கொள்கைகளை இங்கே நுழைய விடவில்லை. அதற்காக பழி தீர்க்கப்படுகிறோம். உங்களுக்கு இந்த மெஸேஜ் கிடைத்தால், பிஸியான பிரதமரிடம் இதனை கொண்டு செல்லுங்கள். கண்ணீருடன் 7 . 5 கோடி தமிழ் ரத்தங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top