பத்திரிகையாளர்களை தாக்கிய தமிழக போலீசாரை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் ( TUJ ) சார்பில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது மட்டுமின்றி, பாலிமர் தொலைக்காட்சி, பிபிசி தமிழ் தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி, உட்பட ஏராளமான பத்திரிகையாளர்களைத் தாக்கியும், கேமராக்களை உடைத்தும், அராஜகம் செய்துள்ள காவல்துறையினரை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த கண்டனப் போராட்டத்தில், பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைத்து போராளிகளும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய உள்ளனர்.

அறவழியில் போராடிய இளைஞர்களையும், களத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றிய பத்திரிகையாளர்களையும் தாக்கப்பட்டதற்கு நியாயம் கேட்போம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.