தமிழர்களின் பண்பாடாகவும், வீரத்தின் அடையாளமாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வேண்டி நம் மாணவர்களும், இளைஞர்களும் உலக சாதனைகளை முறியடிக்கும் விதமாக கடந்த 7 நாட்களாக அறவழிப்போராட்டத்தில் தமிழன் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது என்று சொல்லலாம்.

ஜல்லக்கட்டுத் தடைக்கு பீட்டாவின் தூண்டுதல்  காரணமாக இருந்தாலும், நம் அரசியல்வாதிகளின் சுய லாபத்திற்காகவும், கையாளாகாத்தனத்தின் அடையாளமாகவும் இன்று தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்கள் நிரூபித்துக்காட்டியுள்ளது.

மாநிலம் முழுவதும் அல்ல.. உலகம் முழுவதும் தமிழர்களின் பண்பாட்டை உயர்த்தியும், நினைவுபடுத்தியும், தெரியாதவர்களுக்கு தெரிய புரிய வைத்தும் இந்த போராட்டங்கள் பேருதவியாக அமைந்தன என்றே சொல்லலாம்.

அப்படி தமிழன், தமிழர் பண்பாடு, தமிழர்களின் பாரம்பரியம் இப்படி உலகமே போற்றும் இந்த ஜல்லக்கட்டு போட்டியைத்தான் நிரந்தரமாக நடத்த வேண்டும்மென நம் இளைஞர்கள் அறவழியை கையில் எடுத்து போராடினார்கள்.

ஆனால், தமிழனா இருந்தும், தமிழ் போலீசாகவே போராட்டங்களில் உதவியும், இளைஞர்கள், மாணவர்கள், போலீசார் என்ற வேறுபாடின்றி சென்னை மெரீனாவில் பழகிக்கொண்டனர். போலீசாருக்கு இளைஞர்களும், மாணவர்களுக்கு போலீசாரும் உணவு பரிமாற்றம், குடிநீர், போக்குவரத்தை சரிசெய்தல் போன்ற சம்பவங்களில் இதுவரை உலகளவிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திராத வகையில் அமைந்திருந்தன.

இப்படியெல்லம் மத்திய, மாநில அரசுகளை ஆட்டிப்படைத்து, அவர்களையே ஆட்சி செய்யும் அளவுக்கு போராட்டத்தில் சாதித்தவர்கள்தான் நம் இளைஞர்களின் பெருமையே. கொஞ்சிக்குளாவிய நம் தமிழனனும், தமிழக போலீசார் கடைசியில் பொருத்துக்கொள்ளாமல் அரசியல் தூண்டுதலா? இல்லை மாணவர்களை சமாளிக்க முடியாமல் அவர்களின் உண்மை முகத்தை காட்டிவிட்டனரா?

அதற்கு எடுத்துகாட்டாகத்தான் திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் போலீசாரே ஆட்டோக்களுக்கும், குடிசைகளுக்கும் தீவைத்து அறப்போட்டத்தை மிகப்பெரிய கலவரமாக மாற்றினர். இதற்கு வீடியோ ஆதாரமும் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.