தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணியை துவங்கி வைத்த முதல்வர்!

உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றானது, தற்போது மரபு மாற்றப்பட்ட வீரியமிக்க கொரோனவைரஸ் ஆக மீண்டும் உருவெடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனவைரஸ் பரவலானது, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று நாடு முழுவதும் கோரோனோ கோவிஷீல்டு தடுப்பூசி பணி துவங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், மதுரை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கி வைத்துள்ளார்.

அப்பொழுது பேசிய தமிழக முதல்வர், ‘தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.

இந்த கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்ட பிறகு அடுத்த 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் போடப்படும்.

corona-vaccination-cinemapettai

தற்போது போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாக உள்ளது. மேலும் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது, நான் நிச்சயம் போட்டுக் கொள்வேன்.

அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி ஆனது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவை கொரோனா நோய்தொற்று இல்லாத நாடாக மாற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று பெருமிதத்துடன் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்