Tamil Nadu | தமிழ் நாடு
பட்டாசு தடை செய்யப்பட்ட மாநில முதல்வருக்கு கடிதம் எழுதிய எடப்பாடியார்.. மனநிம்மதி அடைந்த பட்டாசு தொழிலாளர்கள்!
இந்தியா முழுவதும் வரும் நவம்பர் 14ஆம் தேதியன்று, தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படயுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றை மனதில் வைத்துக்கொண்டு கூட்டம் கூடாமல், கொண்டாடிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் தீபாவளி அன்று பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை என இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே இந்த அறிவிப்பால், அண்டை மாநிலங்கள் பலவும், இதே அறிவிப்பை பின்பற்ற திட்டம் தீட்டி வருவதை உணர்ந்த, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் ஒடிசா, ராஜஸ்தான் மாநில முதல்வர்களுக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஏனென்றால், பட்டாசு வெடிப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது குறித்து, நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை, ஆகவே பட்டாசு தடைக்கு மறுபரிசீலனை செய்யுமாறு அந்த மாநிலங்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.
மேலும் தமிழகத்திலுள்ள சிவகாசி பகுதியில் இருந்துதான், இந்தியா முழுவதும் பட்டாசு வினியோகம் செய்யப்படுவதால், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் விவரித்துள்ளார்.

firecracker-workers-cinemapettai
ஆகையால் பட்டாசு தொழிலாளர்களுக்காக, மற்ற மாநிலங்களின் முதல்வர்களிடம் எடப்பாடியார் பரிந்துரைத்தது பொதுமக்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
