அதிமுகவின் அவைத்தலைவரும், தற்போது ஓபிஎஸ் அணியிலிருக்கும் மதுசூதனன், அதிமுகவிலிருந்து முதல்வர் உள்ளிட்ட 13 பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.ராஜேந்திரன், தங்க தமிழ்செல்வன், பா.வளர்மதி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, வி.பி.கலைராஜன், நவநீதகிருஷ்ணன், தளவாய்சுந்தரம் மற்றும் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 13 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.