தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த விருது ஏதோ காரணத்தால் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தின் போது வேளச்சேரியை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் தமிழக திரைப்பட விருது கடந்த சில வருடங்களாக கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா விரைவில் தமிழக அரசு திரைப்பட விருது நமது கலைஞர்களுக்கு வழங்கப்படும், அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.