Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijay-suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் பெயர் மாற்றப்பட்ட படங்கள்.. தல தளபதிக்கே இந்த நிலைமையா

தமிழ் சினிமாவில் படத்தின் தொடக்கத்தில் வைத்த பெயரை ரிலீஸின்போது மாற்றுவது வாடிக்கைதான் அந்த வகையில் பிரபலங்களின் வெற்றி,  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்று பார்த்தால் லிஸ்ட் போய்கிட்டே இருக்கு.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்திற்கு ‘இரும்பு குதிரை’ என்று பெயர் வைக்கப்பட்டதாம். ஷாம், அசின், ஆர்யா போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்த உள்ளம் கேட்குமே படம் முதலில் Pepsi என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனைத்து பெயர்களையும் சேர்த்து பார்த்தால் Pepsi என்று பொருதுமாம்.

விஜய், அசின் நடிப்பில் வெளிவந்த காவலன் படத்திற்கு ‘காவல் காதல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’ படம் முதலில் ‘இது மாலை நேரத்து மயக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் மெகா ஹிட்டான ‘ஜெமினி’ படத்திற்கு முதலில் ‘ஏறுமுகம்’ என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் ஜெமினி என்ற கதாபாத்திரத்திற்கு தான் படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான ‘காக்க காக்க’ படம் முதலில் ‘பாதி’ என்று வைக்கப்பட்டுள்ளது. டபுள் மீனிங் அர்த்தத்துடன் வைக்கப்பட்டு சர்ச்சையான ’36 24 36′ இந்த படத்தின் பெயர் பின்பு ‘கள்வனின் காதலி’ என்று மாற்றப்பட்டது. கமல், ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘குருதிப்புனல்’ இன்றளவும் ரசிகர் இடையே மறக்க முடியாத ஒரு படம் என்றே கூறலாம். அந்த படத்திற்கு ‘துரோகி’ என்று பெயர் வைக்கப்பட்டு பின்புதான் மாற்றப்பட்டுள்ளது.

சூர்யா, அசின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி படம் பல மொழிகளில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அந்த படத்திற்கு முதலில் தல அஜித் நடிப்பதாகவும், அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘மிரட்டல்’,’காங்கேயன்’ என்றும் வெளிவந்தது. அதற்கு பின்னர் சூர்யா நடிப்பதாக கஜினி என்று பெயர் மாற்றி உள்ளனர்.

அஜித், திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் முதலில் ஆயிரம் தோட்டாக்கள், சத்யதேவ் என்று பெயரிடப்பட்டு பின்பு ரிலீசுக்கு முன்னராக பெயர் மாற்றப்பட்டுள்ளது. தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிவாவின் வீரம் படத்திற்கு முதலில் ‘விநாயகம் பிரதர்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். அட்லி இயக்கத்தில் மாஸ் ஹிட்டான தெறி படத்தில் இருக்கு முதலில் ‘காக்கி’ பின் ‘தாறுமாறு’ கடைசியாக ‘தெறி’ என்று வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு முதலாவதாக ‘அநீதிக்கதைகள்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படம் ‘போலீஸ் ரவி’ என்றும், கமல்-சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘தேவர்மகன்’ படம் நம்மவர் என்றும், கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படம் கபாலி, காளி என்றும் பெயர் வைத்து பின்பு மாற்றப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top