தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வரும் புதிய படத்திற்கு ‘டைட்டானிக்’ என டைட்டில் வைத்துள்ளார். மேலும் ‘காதலும் கவுந்து போகும்’ என்ற டேக் லைன் வேறு வைத்துள்ளார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தன் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார்.


இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக கலையரசன், ஹீரோயின்களாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக க்ரிஷ். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்த டைட்டில் வெளியானதுமே ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. நம் நெட்டிசன்கள் பல மேமே போட்டு வருகின்றனர். அதில் சில சாம்பிள் இதோ ..


விஜய் சேதுபதிக்கு “க க போ” என்பது போல் நம் கலையரசனுக்கு இந்த “க கு போ” !!