செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

இனி எவனாவது மைக்கை தூக்கிட்டு வந்தீங்க.. கங்குவாவிற்கு பின் ஆப்பு வைத்த Producer Council

தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து சில முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

முக்கியமாக இந்த ப்ளூ சட்டை மாறன் என்ற ஒருவர் வர, அது தரத்தையே கெடுத்துவிட்டது என்று கூறலாம். அதுவரை படத்தை நியாயமாக விமர்சனம் செய்தவர்கள் தான் இருந்தார்கள். ஆனால் இவர் நெகடிவ் விமர்சனம் கொடுத்து பேமஸ் ஆனதை தொடர்ந்து, இவரது ரூட்டை நிறைய பேர் Follow செய்ய ஆரம்பித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க, டாப் நடிகர்களின் ரசிகர்கள் இன்னொருபக்கம், அவரது ஹீரோ படங்களை தவிர வேறு எந்த ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் படமும் ஓடிவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். உதாரணத்திற்கு, அந்த நடிகர், தனது சினிமா வாரிசாக சிவகார்த்திகேயனை அறிவித்தார்.

அவரது படத்தை ஒருத்தர் கூட நெகடிவ் விமர்சனம் செய்யவில்லை. அதே நேரத்தில், நல்ல கன்டென்ட் படமான வேட்டையன் படத்தை டிசாஸ்டர் என்று சொன்னார்கள். தற்போது, கங்குவா படம், ரீலீஸ் ஆவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே டிசாஸ்டர் என்றார்கள்.

ஆரம்ப புள்ளி வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்

இந்த நிலையில், இதை தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும், என்ற நோக்கத்தில், திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடியாக ஒரு உத்தரவை போட சொல்லி அறிவுறுத்தியிருந்தார். இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2. வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியிருந்தது. இனி இதை ஊக்குவிக்க கூடாது என்று சொல்லி இருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது முக்கிய முடிவு ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், திரையரங்கு வளாகங்களுக்குள் மைக்கை எடுத்துக்கொண்டு எந்த யூட்யூப் சேனலும் பேட்டி எடுக்கிறேன் என்கிற பெயரில் negativity spread செய்ய கூடாது என்று சொல்லி, பப்ளிக் review-க்கு தடை விதித்துள்ளது producer கவுன்சில்.

இதை தொடர்ந்து இதை ஆதரிக்கும் ரசிகர்கள், அய்யா.. அப்படியே அந்த ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரு எண்டு கார்டு போடுங்க என்று கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

Trending News