Tamil Nadu | தமிழ் நாடு
திருப்பூரில் 4 வயது சிறுமியை நாசம் செய்ய முயன்ற கொடூரன்.. கட்டி வைத்து உதைத்த மக்கள்
திருப்பூர்: திருப்பூரில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை மரத்தில் கட்டி வைத்து பொது மக்கள் அடித்து உதைத்தனர். திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, இவரது வீட்டின் அருகே கே குடியிருந்து வரும் கந்தசாமி 34 , பனியன் தொழிலாளி.
இதனிடையே இன்று காலை முதலே குடிபோதையில் வீட்டில் இருந்து வந்த கந்தசாமி, தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை.வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துண்புறுத்திய நிலையில், விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடினர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் கந்தசாமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமியை கந்தாசாமி பாலியல் ரீதியாக துண்புறுத்தியது தெரிய வந்தது . இதனால் கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் கந்தசாமியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.
