திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் இத்தனை கோடியா? கேட்டால் தலையே சுத்துது

ஆந்திரா மாநிலத்தில் திருமலை பகுதியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயில் ஆண்டுக்கு பல கோடி வருமானங்களை பெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி கோவிலில் அதிக வருமானங்களை கொண்ட கோயில்களில் ஒன்றாகும்.

இதன் சொத்து மதிப்பு மிக அதிகமாகவும் இதன் நிர்வாகத்தினை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் இருப்பு தொகையாக டெபாசிட் செய்துள்ளது. இதன் மதிப்பு தற்போது 12 ஆயிரம் கோடி என அறிவித்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில் இதுவரை 2.5 கோடி பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்துள்ளதாகவும்.

இதில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 8.7 டன் தங்கமும் ,கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்களும் காணிக்கையாக அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் திருப்பதி தேவஸ்தான கோவிலில் கிடைத்த தங்க ஆபரணங்கள் தனியார் வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளனர். 8.7 டன் 550 கிலோ தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியில் 1938 கிலோ தங்கத்தை இந்திய ஓவர்சீஸ் வங்கியில் வைத்துள்ளனர். இதன்மூலம் ஆண்டு வட்டி ரூபாய் 845 கோடி வருவதாக கூறியுள்ளனர்.

Leave a Comment