திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட கருத்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து மத உணர்வை புண்படுத்தும்படியாக உள்ளதாக பக்தர்கள், கருத்து தெரிவித்து வரும் வேளையில், தமிழகத்தில் இதை ஒரு கேலி கூத்தாக மாற்றி கலாய்த்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சியாமள ராவ், நெய்யில் வனஸ்பதி மட்டுமே கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார். ஆனால் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் விலங்குகளின் கொழுப்பும் கலக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தற்போது அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதுடன், அதன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் சியாமள ராவ் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கடவுள் முன்னிலையில் சத்தியம் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், கடவுள் நேரடியாக வந்து கேட்கமாட்டார் என்ற தைரியத்தில் இவர் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்று கருத்துக்கள் வெளிவந்தன. இது ஒரு புறமிருக்க, தற்போது, 6 வருடத்திற்கு முன்பு காணாமல் போன ஒரு வைரக்கல் பற்றிய சர்ச்சையும் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில், லட்டுவில் சேர்க்கப்பட்ட நெய் தமிழகத்திலிருந்து வந்தது என்று புதிய புரளி கிளப்பப்பட்டது. ஆனால் இங்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் திட்டவட்டமாக, “நாங்கள் சுத்தமான நெய்யை தான் விநியோகம் செய்தோம். எங்களிடம் வாங்கிய பிறகு, நீங்கள் அதில் என்ன சேர்த்தீர்கள் என்று எங்களுக்கு தெரியாது. வேண்டும் என்றால், எங்கள் நெய்யய் நாங்கள் ஆய்விற்கு உட்படுத்துகிறோம். என்ன வருகிறது என்று பாப்போம் ” என்று தெளிவாக சொல்லிவிட்டனர். மறுபுறம் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, “இங்கு தமிழக கோவில்களில் நாங்கள் சுத்தமான ஆவின் நெய் தான் பயன்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
தற்போது லட்டு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதற்க்கு பிராயச்சித்தம் தேடும் பணியில் இருக்கிறார்கள், திருப்பதி கோவில் ஊழியர்கள் மற்றும் தெலுங்கானா அரசாங்கம். இதற்காக பிராயச்சித்த பூஜை செய்யவிருக்கின்றனர். இதை கேள்வி பட்டதும், நெட்டிசன்கள் “இனி வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன.. அதான் சாப்பிடீங்களே.. “என்று சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.