fbpx
Connect with us

திருநங்கையாக மாறிய அங்காடித்தெரு மகேஷ்.! வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருநங்கையாக மாறிய அங்காடித்தெரு மகேஷ்.! வைரலாகும் புகைப்படம்

கடந்த 2010ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடித்தெரு என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தென் தமிழகத்தில் இருந்து ஒருவர் ஜவுளிக்கடையில் சென்னையில் வேலை பார்த்து அதில் படும் அவஸ்தைகளை துல்லியமாக, உண்மையாக கூறியிருப்பார்கள்.

இந்தப் படம் இப்போது கூட சிலர் மனதில் அவ்வப்போது வந்துபோகும் பாடல்களின் மூலம். இதில் நடித்த மகேஷ், அஞ்சலி தங்களது உண்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். தற்போது  மகேஷ் ‘தேனாம்பேட்டை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் மகேஷ் வாட்டர் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார், அதுமட்டுமல்லாமல் திருநங்கையாக  நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. விஜய்சேதுபதி  திருநங்கையாக நடித்து வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mahesh

mahesh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top