ரஜினிக்கு படம் இயக்குவது வேஸ்ட் , வெட்டி வேலை – பிரபல இயக்குனர் பகீர் பேச்சி

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது காலா படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பின் முதல் கட்டம் நாளையுடன் முடிவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் பிரபல தொலைகாட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் இவரிடம்  ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்க்கு மிஸ்கின், “ரஜினியே என்னை அழைத்தாலும் அவருடன் நான் படம் பண்ண மாட்டேன்,நான் பண்ற ஸ்டைல் வேற அவரு பண்ற ஸ்டைல் வேற.. என் ஹீரோ ஒரு மூணு பேரை அடிப்பாரு…ஆனா ரஜினி 300 பேரை அடிப்பாரு…ரஜினிக்கு படம் பண்ணுவது வேஸ்ட், வெட்டி வேலை” என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.

மிஸ்கின் தற்போது விஷாலை வைத்து “துப்பறிவாளன்” படத்தை இயக்கி வருகிறார்.

Comments

comments