fbpx
Connect with us

பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தை திடீரென மாற்றிய விஜய் டிவி.. ஷாக்கான ரசிகர்கள்!

big-boss-4-kamal-promotional-video

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தை திடீரென மாற்றிய விஜய் டிவி.. ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்து தற்போது நான்காவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தான் நெட்டிசன்களுக்கும் மக்களுக்கும்  பெரிய பொழுதுபோக்காக அமைந்துள்ளது.

மேலும் மற்ற சீசன்களில் காட்டிலும் இந்த சீசன் தடாலடியாக பல திருப்பங்களைக் கொண்டு இணையதள வாசிகளுக்கு பெரும் தீனியாக அமைந்து வருகிறது.

big-boss-1

big-boss-1

இந்த நிலையில் தற்போது ஆயுத பூஜை கொண்டாடும் வகையில் பிக் பாஸ் ரசிகர்களை  அசர வைக்கும் புரோமோவை வெளியீட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது விஜய் டிவி.

அதாவது பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புது முயற்சியாக முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 மணி நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

இதன் அறிவிப்பை கமல் புரோமாவுடன் கூறி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்த புரோமோவின் இறுதியில் கமல், ‘நல்லவேள நாளைக்கு நாலு மணி நேர ஷோல நான் இல்ல’ என்று கூறி நைசாக நழுவுவது தான் ஹைலைட்டே.

மேலும் இந்த புரோமோவை பார்த்த நெட்டிசன்கள் ‘ஒரு மணிநேர ஷோ  வே தாங்கல.. இதுல நாலு மணி நேரமா’ என்றும், ‘இன்னைக்கி கண்டண்டுக்கு பஞ்சமே இருக்காது’ என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.

மேலும் புரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top