India | இந்தியா
டிக்-டாக்கில் வீடியோ போட்டு முதுகெலும்பு முறிந்த நபர் மரணம்.. கதறி அழும் பெற்றோர்கள்
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது டிக்-டாக் இந்த செயலியை இளைஞர்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்துகின்றனர். நடனமாடுவது, பாடுவது, சாகசங்கள் செய்து வீடியோ பதிவிட்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் என்பவர் டிக்-டாக் செயலியில் நடனமாடி பாடல் பாடி சாகசங்கள் செய்து வந்துள்ளார். திடீரென சில நாட்கள் பெரிய சாகசம் செய்வதில் ஈடுபட்டுள்ளார். தன் நண்பரை நிக்க வைத்து தொலைவில் இருந்து ஓடி வந்து குதிப்பது போல் செய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவர் முதுகெலும்பு முறிந்துள்ளது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால் 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதைப்பற்றி குமாரின் பெற்றோர் கூறியது குமார் உடலில் முக்கியமான எலும்புகள் நொறுக்கப்பட்டது மேலும் மருத்துவர்கள் எலும்புகள் நொறுக்கப்பட்டதால் பிழைப்பது கடினம் என்பதை முன்னதாகவே கூறியதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
பல குடும்பங்கள் டிக்-டாக் செயலியால் நாசமாகி வரும் நிலையில் அந்தப் டிக்-டாக் செயலியால் தற்போது ஒரு உயிரும் பறிபோயுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து இது மாதிரி செயல்களை தடுக்கவும்.
